Thursday 5 January 2012

சாருவின் "ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி" விரிவான விளக்கம்




மேல உள்ள கருமத்தை யாராவது வாங்கி இருகிர்களா ? படிச்சி இருக்கிங்களா ?  நான் ஒரு வாரத்துக்கு மின்னாடி தான் வாங்கி இரண்டு நாட்களுக்கு முன்னால் படித்தேன்.உடனே பதிவு எழுதனும் தோணுச்சி அப்படி ஒரு ஈர்ப்பு(கடுப்பு).ஆதலால்..மக்களே!,புத்தக பிரியர்களே(உங்களுக்கு தெரியும்),புதிதாக படிக்க ஆரம்பித்தவர்களே தயவு செய்து இதை வாங்காதிங்க.டோட்டல் வேஸ்ட்.மொக்கைனா அப்படி ஒரு மொக்கை.மொக்கைக்கு இலக்கணம் எழுதி இருக்கிறார் சாரு.

     படிக்க ஆரம்பித்தவுடன் முதல் இரண்டு மூன்று பக்கத்தில் ஒரு சுவரிசியமும் இல்லை சரி போக போக நல்லா இருக்குமன்னு மனச தேத்திக்கிட்டு பக்கத்தை புரட்டினேன் எஞ்சியது வெறுப்பு மட்டும்மே.பாதி படித்தவுடன் புத்தகத்தை போய் அவர் மூஞ்சில விட்டு எரியனும்னு தோணுச்சி அப்படி ஒரு எரிச்சல்.அது நடக்காது என்பதால் இதை இத்தோடு மூடி விடுவதே நல்லதுன்னு மூடிட்டேன்.அந்த கடுப்பை வெளிப்படுத்துவே இந்த பதிவு.

சிறுகதை தொகுப்புன்னு அட்டைல போட்டுட்டு உள்ள ஒரு மண்ணும் இல்ல.சரி கதை தான் எதுவும் இல்ல பிடித்த வரிகள் எதாவது..க்கும் அதுவும் இல்ல.இத எதுக்கு போட்டானுங்க? ஒன்னும் புரியல.இங்கு பல தமிழ் பதிவாளர்கள் அருமையாக எழுதிகிறார்கள் பேசாம அதையே படிச்சி இருக்கலாம்.நல்ல வேல பெரிய அமௌன்ட் எதுவும் இல்ல 60ரூபாய் தான்.ஆனா இத எல்லாம் ஒசுல குடுத்தா கூட படிக்க கூடாது.சொறி நாய் எழுதுன மாதிரி இருக்கு.           

ஒரு புத்தகத்தை வைத்து ஒரு எழுத்தாளனை எடை போட முடியாது இருந்தாலும் எழுத்தின் கூர்மையை வைத்து அவரின் வேறு சில புத்தகம் வாங்கலாமா வேணாமான்னு முடிவு எடுக்க முடியும்னு நினைகிறேன்.அந்த வகையில் இவர் எழுத்து என்னை எந்த இடத்திலும்  ஈர்க்க வில்லை.ஒரு வேலை இதை புரிந்து கொள்ள ஸ்பெஷல் அறிவு வேண்டுமோ என்னவோ!.இனி சாரு நிவேதா புத்தகம் என்றால் நோ. யாராவது படிச்சிட்டு நல்லா இருக்குனு சொன்னா தான் தொடுவேன் J      
                      
பல நல்ல எழுத்தாளர்களின் புத்தகம் படிக்க பாக்கி இருக்கும் போது சகிப்பு தன்மையோடு இவரின் படைப்புகளை படிக்க அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.

பல நல்ல புத்தகம் வாங்கும் போது சில குப்பைகளும் வருவது தவிர்க்க முடியாது என்பதற்கு இந்த “ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி” ஒரு எடுத்துகாட்டு     

புத்தக கண்காட்சிக்கு போகுவோருக்கு ஒரு எச்சரிக்கை ஒசுல குடுத்தா கூட வாங்காதிங்க அம்புட்டுதான் சொல்லுவேன் !  

3 comments:

karthi.bsr said...

பாஸ் இதெல்லாம் இப்படித்தான் கண்டுகிடாதிங்க!!

karthi.bsr said...

ம்ம மறந்தி்டேன் தக்காளி போஸ் ஜுப்பரு

குணா said...

@karthi.bsr ஹா ஹா இவர் போஸ் அடிச்சிக்க ஆல் இருக்கா என்ன ?. நன்றி பாஸ்.

Post a Comment