Thursday 5 January 2012

சாருவின் "ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி" விரிவான விளக்கம்




மேல உள்ள கருமத்தை யாராவது வாங்கி இருகிர்களா ? படிச்சி இருக்கிங்களா ?  நான் ஒரு வாரத்துக்கு மின்னாடி தான் வாங்கி இரண்டு நாட்களுக்கு முன்னால் படித்தேன்.உடனே பதிவு எழுதனும் தோணுச்சி அப்படி ஒரு ஈர்ப்பு(கடுப்பு).ஆதலால்..மக்களே!,புத்தக பிரியர்களே(உங்களுக்கு தெரியும்),புதிதாக படிக்க ஆரம்பித்தவர்களே தயவு செய்து இதை வாங்காதிங்க.டோட்டல் வேஸ்ட்.மொக்கைனா அப்படி ஒரு மொக்கை.மொக்கைக்கு இலக்கணம் எழுதி இருக்கிறார் சாரு.

     படிக்க ஆரம்பித்தவுடன் முதல் இரண்டு மூன்று பக்கத்தில் ஒரு சுவரிசியமும் இல்லை சரி போக போக நல்லா இருக்குமன்னு மனச தேத்திக்கிட்டு பக்கத்தை புரட்டினேன் எஞ்சியது வெறுப்பு மட்டும்மே.பாதி படித்தவுடன் புத்தகத்தை போய் அவர் மூஞ்சில விட்டு எரியனும்னு தோணுச்சி அப்படி ஒரு எரிச்சல்.அது நடக்காது என்பதால் இதை இத்தோடு மூடி விடுவதே நல்லதுன்னு மூடிட்டேன்.அந்த கடுப்பை வெளிப்படுத்துவே இந்த பதிவு.

சிறுகதை தொகுப்புன்னு அட்டைல போட்டுட்டு உள்ள ஒரு மண்ணும் இல்ல.சரி கதை தான் எதுவும் இல்ல பிடித்த வரிகள் எதாவது..க்கும் அதுவும் இல்ல.இத எதுக்கு போட்டானுங்க? ஒன்னும் புரியல.இங்கு பல தமிழ் பதிவாளர்கள் அருமையாக எழுதிகிறார்கள் பேசாம அதையே படிச்சி இருக்கலாம்.நல்ல வேல பெரிய அமௌன்ட் எதுவும் இல்ல 60ரூபாய் தான்.ஆனா இத எல்லாம் ஒசுல குடுத்தா கூட படிக்க கூடாது.சொறி நாய் எழுதுன மாதிரி இருக்கு.           

ஒரு புத்தகத்தை வைத்து ஒரு எழுத்தாளனை எடை போட முடியாது இருந்தாலும் எழுத்தின் கூர்மையை வைத்து அவரின் வேறு சில புத்தகம் வாங்கலாமா வேணாமான்னு முடிவு எடுக்க முடியும்னு நினைகிறேன்.அந்த வகையில் இவர் எழுத்து என்னை எந்த இடத்திலும்  ஈர்க்க வில்லை.ஒரு வேலை இதை புரிந்து கொள்ள ஸ்பெஷல் அறிவு வேண்டுமோ என்னவோ!.இனி சாரு நிவேதா புத்தகம் என்றால் நோ. யாராவது படிச்சிட்டு நல்லா இருக்குனு சொன்னா தான் தொடுவேன் J      
                      
பல நல்ல எழுத்தாளர்களின் புத்தகம் படிக்க பாக்கி இருக்கும் போது சகிப்பு தன்மையோடு இவரின் படைப்புகளை படிக்க அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.

பல நல்ல புத்தகம் வாங்கும் போது சில குப்பைகளும் வருவது தவிர்க்க முடியாது என்பதற்கு இந்த “ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி” ஒரு எடுத்துகாட்டு     

புத்தக கண்காட்சிக்கு போகுவோருக்கு ஒரு எச்சரிக்கை ஒசுல குடுத்தா கூட வாங்காதிங்க அம்புட்டுதான் சொல்லுவேன் !  

Wednesday 30 November 2011

தி காட்பாதர் – விமர்சனம்



சிறு வயதில் இருந்தே எனக்கு ஆங்கில படம் என்றால் கொள்ள பிரியம்.ஒரு ஆங்கில படம் விடாமல் பார்துடுவேன். Jackie Chan சென்னை வந்து இருக்கும் போது புகைப்படம் எடுப்பதற்காக காத்து கிடந்தேன்.     இப்படி எல்லாம் நான் மனச்சாச்சி இல்லாம பொய் சொல்ல மாட்டேன்.நான் ஆங்கில படம் அவ்வளவாக இல்ல சுத்தமா பார்க்க மாட்டேன்.கடைசியாக பார்த்த படம் Matrix(பார்த்து பயந்தவன் தான் அத்தோடு அங்கில படம் என்றால் ”நோ”) அதற்கு முன்பு Godzilla இப்படி விரல் விட்டு எண்ணிடலாம் நான் பார்த்த ஆங்கில படத்தை.jurassic park படம் பார்க்கும போது முதல் அரைமணி நேரம் தியேட்டரில் தூங்கிட்டேன்னா பார்துகோங்க என் ஆங்கில பட மோகம் எப்படி பட்டதுன்னு

நான் இப்படி இருக்க நண்பர்கள் சிலர் வுட்டாண்ட வந்து தஸ் புஸ்ன்னுநாலு அங்கில படம் பேரு சொல்ராங்க நம்ப பேய் அறைந்த மாதிரி நிற்க வேண்டியதா இருக்கு.சரி நம்பளும் நாலு ஆங்கில படத்தை பார்க்கலாம்னு பார்த்தது தான் இந்த “தி காட்பாதர்” படம்.   

“தி காட்பாதர்” 




காட்பாதர் 1972ஆம் ஆண்டு வெளிவந்த படம். Puzo என்பவரின் நாவலை படம்மாக எடுக்க பட்டது.அவரே அந்த படத்தின் திரை கதையையும் எழுதி உள்ளார்.பல விருதுகளை பெற்றுஉள்ளது.”ஆல் டைம் மூவி“ என்று இந்த படத்தை வர்ணித்து உள்ளனர்.IMDB’ல் இந்த படம்  இரண்டாவது இடத்தில் உள்ளது.

கதை சுருக்கம்


இந்த படத்தின் கதையை சுருங்க சொல்வது கடினம், முயற்சி செய்கிறேன். டான் விட்டோ கார்லியோன் பல கொள்ளை கொலைகலில்  ஈடுபட்டு illegal ஆக பிசினெஸ் செய்து வாழ்ந்து வருபவர்.இதே தொழிலில்  ஈடுபட்டு வருபவர்களுக்கும் உதவியும் செய்பவர்.இதனால் பல கொள்ளையர்கள் மத்தியில் இவர் தி காட்பாதர்  ஆக திகழ்ந்து வருகிறார்.கார்லியோனுக்கு மூன்று மகன்கள் ஒரு மகளும் உண்டு.முதல் மகன் தனது அப்பாவின் தொழிலுக்கு உதவியாக இருக்கிறார்.இரண்டாவது மகன் ஆளுமை திறன் இல்லாமல் இருக்கிறார்(அவன் அதுக்கு சரி பட்டு வரமாட்டேன்) என்ற பாணியில்.மூன்றாவது மகன் தொழிலில் இருந்து விலகியே இருக்கிறார் ஒரு பெண்ணை காதலித்தும் வருகிறார்.மகள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். 



Virgil Sollozzo என்பவர்  காட்பாதரிடம் தனது Drug பிசினஸ்க்கு உதவும்மாறு கேட்கிறார். காட்பாதர்  மறுக்கிறார் இதனால் அவரை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர்.ஐந்து குண்டு பாய்ந்து அவர் உயிர் பிழைக்கிறார்,ஆனால் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு revenge எடுக்க மூன்றாவது மகன்(Michael) களத்தில் இறங்குகிறார், திட்டமிட்டு Sollozzo மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியை கொலை செய்து தலைமறைவாகிறார்.இதனால் Gangware உருவாகிறது.முதல் மகன்( Sonny) குண்டு வைத்து தகர்க்க படுகிறார். தலைமறைவான இடத்தில ஒரு பெண்ணையும் மணக்கிறார் மைகேல்.மைகிலை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர் ஆனால் அதில் அவர் மனைவி உயிர் இழகிறாள். இதற்கிடையில் காட்பாதர் சற்று குணம் அடைகிறார்.கொள்ளையர்களை சந்தித்து Ganwareரை முடித்து கொள்ள அழைப்பு விடுகிறார்.மைகேல் விடு திருப்புகிறார். காட்பாதர் தனது பொறுப்புகளை மைகேலிடம் ஒப்படைக்கிறார்.காட்பாதர் தனது பேரனுடன் விளையாடும் பொது மரணம் அடைகிறார்.மைகேல் குடும்ப பொறுப்புகளையும் பிசினஸ்சையும் ஏற்கிறார்.

இத்துடன் முதல் பாகம் முடிவடைகிறது.   


விமர்சனம்

பிரம்மிப்பு என்ற ஒரே சொல்லில் இந்த படத்தை விமர்சித்து விடலாம்.பிலிம் மேக்கிங் என்ற சொல் இந்த படத்திற்கு கச்சிதமாக பொருந்தும்.ஒரு ஒரு சீன்னும் மிக நுணுக்கமாக எடுத்து உள்ளனர்.இந்த படம் பார்க்கும போது பல இந்திய திரைப்படங்கள் நினைவுக்கு வருகிறது தேவர் மகன்,நாயகன்,சர்க்கார்,சர்க்கார் ராஜ்,புதுப்பேட்டை,குரு இன்னும் பல பல படங்கள்.இவை காப்பி என்று கூரவில்லை ஆனால் அந்த திரைப்படங்களுக்கு எல்லாம் “தி காட்பாதர்” தான் குரு என்று சொன்னால் யாரும் மறுக்க முடியாது.நாயகன் இந்த படத்தின் காப்பி என்று கூரி மணிரத்தினத்தை உழைப்பை இழிவு படுத்த விரும்ப வில்லை.நாயகன் தனது பாதையில் சிறந்தவையே.

இந்த படத்தை ஏற்கனவே பல பேர் பார்த்து இருப்பிர்கள்.பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

இது எனது முதல் பதிவு பிழை இருந்தால் திருத்தி படிக்கவும் J 

நன்றியுடன் 
  குணா